கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிக்கு மாதவிடாய் காலம் என்பதால் வகுப்பறை வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த அவலம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள செங்கோட்டை பாளையம் கிராமத்தில் சுவாமி சித்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மாதவிடாய் காலம் என்பதால், அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படியில் அமர வைத்துத் தேர்வெழுத வைத்த அவலம் நடந்துள்ளது. இந்நிலையில் மாணவியை பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது தாய், இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது இங்கு அப்படித் தான் நடக்கும், என நீ வேணும்னா, வேறு பள்ளியில் சேர்த்துக் கொள் என ஆசிரியர்கள் பதிலளித்துள்ளனர்.
மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து தேர்வெழுதும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாயார், பள்ளியின் மீது புகார் அளித்துள்ளார்.