tamilnadu

img

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக முழு கடையப்பு போராட்டம்!

நெல்லை,ஏப்.18- நெல்லையில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான முழு கடையடைப்பு போராட்டத்தால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அதன்படி இன்று காலையிலிருந்து மேலப்பாளையத்தில் 1500 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று மாலையில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.