திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி யைக் குறைக்க வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்களன்று கவுன்சிலா்கள் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். ஆணையர் ராமமூர்த்தி, துணை மேயா் பாலசுப்பிரமணியம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாந கராட்சியில் வருகிற நிதியாண்டில் 255 கிலோ மீட்டர் தார்ச்சாலைகள் ரூ.147 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு புனரமைக்கப்பட இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் 756 சாலைகள் விடு பட்டுள்ளது. இந்த சாலைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயார் செய்து, நிதிநிலை அறிக்கை அரசு சமா்ப்பிப்பதற்கு முன்பாக கோரிக்கை அனுப்ப அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 756 சாலைகள் 98 கிலோ மீட்டா் தூரத்திற்கு குறியீடுகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்க தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது என மேயர் தினேஷ்குமார் தெரிவித் தார். திருப்பூர் மாநகரில் பொதுமக்கள், பனி யன் தொழில் சார்ந்த தொழில்துறையினர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்கத்தினர், அரசி யல் கட்சியினர் மத்தியில் கோவை மாநகராட்சி உள்பட பிற மாநகராட்சிகளுக் கும், திருப்பூர் மாநகராட்சிக்கும், சொத்து வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளது. இதைக் கண்டித்தும் சொத்து வரியைக் குறைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தியது. மற்ற அரசி யல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந் தன. இந்நிலையில், பொதுமக்கள், தொழில்து றையினர், கவுன்சிலர்களின் கோரிக்கை களை ஏற்று, அனைவருக்கும் பாதிப்பு ஏற்ப டாத வகையில் சொத்து வரியை குறைத்து விதிக்க அரசின் அனுமதி வழங்கக் கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மேயர் தினேஷ்குமார் கூறினார். இதற்கு மாமன்றத்தில் பலரும் வரவேற்புத் தெரி வித்தனர். இக்கூட்டத்தில் அதிமுக அன்பகம் திருப்பதி பேசுகையில், மாநகராட்சியில் விடு பட்ட சாலைகளை அமைக்க மாநகராட்சி நட வடிக்கை மேற்கொண்டது வரவேற்கத்தக் கது. இருப்பினும் எந்தெந்த வார்டுகளில் சாலைகள் தேவைப்படுகிறது. சாலைகளை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கவுன்சிலா்களுக்கு தகவல் அளித்து கணக் கெடுக்க வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.ரவிச்சந்தி ரன்: மாநகராட்சி சொத்து வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது. இது போல் குப்பை வரிகளை குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். குப்பை வரி அதிக ரிப்பால் பலரும் பாதிக்கப்பட்டு வருகி றார்கள். இதனையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.மணிமேகலை கூறியதாவது: திருப்பூர் மாநகரில் ஏ, பி, சி என வகைப்பாடு செய்து சொத்து வரி விதித்தி ருப்பது அதிகமாக உள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்து வரியைக் குறைக்க வேண்டும். மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரி உயர்வு என்பதையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண் டார். இதற்கு பதிலளித்த மேயர் தினேஷ்கு மார், வரிக் குறைப்புக்குத்தான் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஆண்டுக்கு 6 சதவி கிதம் வரி உயர்வு என்பது மாநில ரீதியாக முடிவு செய்யப்பட்டது என்று பதிலளித்தார். மேலும் நொச்சிபாளையம் கழிவுநீர் கால் வாய் பிரச்சனையை ஆண்டுக்கணக்கில் வலி யுறுத்தி வருவதை நடவடிக்கை எடுக்கா மல் இருப்பதை மணிமேகலை கேள்வி எழுப் பினார். நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட் டில் உள்ள இந்த பல்லடம் சாலை நொச்சிபா ளையம் கால்வாய் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதாக மேயர் தினேஷ்குமார் கூறி னார்.