பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு
கோவை, மார்ச் 20– கோவை வடவள்ளி யைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார் (39), தொண்டாமுத்தூர் பகுதி யில் பாம்பு கடித்த நிலை யில், அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டும், புதனன்று இரவு உயிரிழந்தார். கடந்த 17 ஆம் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த நல்ல பாம்பை பிடிக்கச் சென்றபோது, அந்த பாம்பு சந்தோஷை கடிந் தது. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக உயிரிழந்தார். சந்தோஷ் குமார் பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் புகும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவித்து வந்தார். ராஜநாகம் உள்ளிட்ட விஷம் மிகுந்த பாம்புகளை கூட அவர் லாவகமாக பிடித்து வந்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, ஊருக்குள் வரும் பாம்புகளை பிடித்து வருகி றார். சுமார் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருப்பார் என கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக் கிறார்கள். பெண் குழந்தைகள் இருவரும் சிறிய வயது உடைய குழந்தைகள். ஒரு குழந்தை மாற்றுத்திற னாளியாக உள்ளார். எனவே, இவரின் குடும்பத்திற்கு அரசு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
விபத்து காப்பீட்டு சிறப்பு முகாம்
கோவை, மார்ச் 20 - கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப் பினராக உள்ள ஊடகவியலாளர்களுக்கு விபத்து காப் பீட்டு சிறப்பு முகாம் வியாழனன்று துவங்கியது. இந்த முகாமில், India Post Payments வங்கியின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த சிறப்பு முகாம், கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இரண்டு நாட்கள் (மார்ச் 20, 21) நடைபெறுகிறது. இந்த முகாமில், அஞ்சலக டிஜிட்டல் வங்கி கணக்கு தொடங்கி, விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தனர். இத்திட் டத்தின் கீழ், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை விபத்து சிகிச்சை செலவுகளுக்கும், உடல் உறுப்பு இழப்பு அல்லது நிரந்தர இழப்பு ஏற்படும் பட்சத்தில் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
மிரட்டி பணம் பறிப்பதாக, சாயப்பட்டறை உரிமையாளர்கள் புகார் நாமக்கல்
, மார்ச் 20- சாயபட்டறை உரிமையாளர்களை தனியார் அமைப் பினர் மிரட்டி பணம் கேட்பதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் புதனன்று புகார் மனு ஒன்றை அளித் தனர். அதில், சாயப்பட்டறை உரிமையாளர்களை ‘சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரை கொண்ட பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பினர், அலைபேசி யில் அழைத்து, ‘தங்கள் சாயப்பட்டறைகளிலிருந்து சுத் திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை காவிரி ஆற்றில் வெளி யேற்றுகிறீர்கள். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது’ என மிரட்டுகின்றனர். மேலும், தேநீர் கடை மற்றும் உணவகங்களுக்கு வரவழைத்து ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். மேலும், ஒரு சிலர் பத்திரிகையாளர்கள் என்ற ஏதோ ஒரு போலியான அடையாள அட்டையை காட்டி பணம் பறிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூத்து குலுங்கும் அபூர்வ வகை மலர்கள்
உதகை, மார்ச் 20– உதகையில் உள்ள ஒரு வீட்டில் இளஞ்சிவப்பு நிறத்தில் பிரம்ம கமலம் மலர்கள் பூத்து குலுங்குவ தால், அதை மக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்து வரு கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கம லம் மலர்கள், உதகையில் உள்ள குல் முகமது சாலை பகுதியில் உள்ள வீட்டில் தற்போது பூத்து குலுங்கு கின்றன. இந்த மலர்கள் அபூர்வமாக இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. பொதுவாக, இந்த மலர்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே பூக்கும். தென் அமெ ரிக்கா நாடான மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாகக் கொண்ட பிரம்ம கமலம் மலர்கள், அழியும் பட்டியலில் உள்ளன. இந்த மலர்களை அந்த வீட்டு உரிமையாளர் பல ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வருகிறார். இந்த மலர்கள் இலங்கை நாட்டில் சொர்க்க பூ என்று அழைக் கப்படுகிறது. மலர்களின் இளவரசி என்றும் அழைக் கப்படும் பிரம்ம கமலம் மலர் உதகையில் உள்ள பூங்கா வில் பூத்துள்ளதை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல் கின்றனர்.