tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி பணிகள் அரசு முதன்மை செயலர் களஆய்வு

ஸ்மார்ட் சிட்டி பணிகள் அரசு முதன்மை செயலர் களஆய்வு

ரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை  செயலாளர் தா.கார்த்திகேயன் களஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை  செயலாளர் தா.கார்த்திகேயன் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட் டம், சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படும் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்தார். 90  விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பணி யினை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து, அப்பகுதியில் ரூ.18.48 கோடி மதிப் பீட்டில் புதியதாக ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை  வளாகம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவ தையும் பார்வையிட்டார். மேலும், ஈரோடு மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை மேம்ப டுத்தும் பணி ரூ.26.60 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்படுவதையும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.  இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராம  கிருஷ்ணசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி, நகர்நல அலுவலர் கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உட னிருந்தனர்.