குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்
குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேங்கியிருப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கா னோர் பேரணியாக சட்ட மன்ற உறுப்பினர் அலுவல கம் நோக்கி சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 1, 7, 8, மற்றும் 10-வது வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீரும், கழிவுநீரும் சூரி யம்பாளையம் வழியாகச் செல்கிறது. இத னால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து குழந்தைகள் முதல் முதிய வர்கள் வரை பல்வேறு நோய்த்தொற்றுக ளுக்கு ஆளாகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திங்களன்று சூரியம்பாளையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு சட்டையபுதூர், அண்ணா சிலை, நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று திருச் செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சென்னையில் இருப்பதால், தொலைபேசி வாயிலாகப் பொதுமக்களிடம் பேசிய அவர், விரைவில் நேரில் வந்து ஆய்வு செய்து, அனைவருக்கும் பாதிப்பில்லாத வகையில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக் கள் கலைந்து சென்றனர்.