tamilnadu

img

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை வாலிபர், மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை வாலிபர், மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி, டிச.16- அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது சட்டப் படி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அப்பள்ளி யில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மணிவண்ணன் என்பவர் பாலியல்  தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர் பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததை யடுத்து, அவர்கள் பள்ளியின் தலைமை ஆசி ரியரிடம் புகாரளித்துள்ளனர். அதனடிப்படை யில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு  பதிலாக ஊர் முக்கியப் பிரமுகர்களிடம் பேசி  பிரச்சினையை தீர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இச்சம்பவத்தில்  கட்டப்பஞ்சாயத்து செய்து, ஆசிரியரை  தப்பிக்க விட்டுள்ளனர்.எனவே, மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரி யர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது  செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவ ரின் தவறை மூடி மறைக்கும் வகையில்  கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு  துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள்  மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்  சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் மா.குறளர சன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச்  செயலாளர் பி.கோவிந்தசாமி, பொருளாளர் எம்.அருள் குமார், துணைச்செயலாளர் சிலம் பரசன், மாநிலக்குழு உறுப்பினர் ராகப் பிரியா, நிர்வாகிகள் அரவிந்த், அருள் குமார்,  அலெகஸ், முத்து, கார்த்திக், சத்யராஜ், மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின்,  மாவட்டத் தலைவர் அஜித், துணைச்செயலா ளர் தனுஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.