சேலம்: வேலை நிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு
சேலம், ஏப்.25- மே 20 ஆம் தேதியன்று நடைபெற வுள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை வெற் றிகரமாக நடத்துவதென, சேலம் மாவட்ட ஆயத்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் விரோத கொள்கைகளை ஒன்றிய மோடி அரசாங்கம் அமல்படுத்தி வரு கிறது. குறிப்பாக, தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக பிரித்து தொழிலாளர்களை வஞ்சித் துள்ளது. இதனைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்பனை செய்யக்கூடாது. தொழிலாளர் நல உரிமைகளை பறிக் கக்கூடாது, உள்ளிட்ட 17 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. அந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்து வது குறித்து, மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் சேலம் ஒய்எம்சிஏ அரங் கத்தில் வெள்ளியன்று ஆயத்த மாநாடு நடைபெற்றது. சிஐடியு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். எச்எம்எஸ் நிர் வாகி கணேசன் வரவேற்றார். எல்பிஎப் செயலாளர் பொன்னி பழனியப்பன் முன்னிலை வகித்தார். இதில் சிஐ டியு மாநில துணைத்தலைவர் ஆர். சிங்காரவேலு, ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ் ணன், எம்எல்எப் மாநில பொதுச்செய லாளர் ஆவடி அந்திரதாஸ், அகில இந்திய தொமுச பேரவை துணைத் தலைவர் பி.கிருஷ்ணன், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் சி.கோவிந்தன், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பியூடியூசி மாநிலத் தலைவர் வி.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், நிர்வாகிகள் ஆர்.வெங்கடபதி, பி