tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மாநாட்டிற்கு ரூ.1 லட்சம் நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான நிதி அளிப்பு கூட்டம் மதுக்கரை ஒன்றியக் குழு சார்பில் க.க சாவடியில் புதனன்று நடை பெற்றது. கே.ஜி. சாவடி கிளைச் செயலாளர் கந்தசாமி, தலை மையில், வாளையாறு கிளை ரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி, வி.ஆர். பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மதுக் கரை ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.சண்முகம், மதுக்கரை ஒன்றியப் பொருளாளர் எம்.பஞ்சலிங்கம், தவிச மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, கட்சியின் அகில இந்திய மாநாட் டிற்கான நிதியாக ரூ. 1 லட்சத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராமமூர்த்தியிடம் வழங்கப்பட்டது.

ஆடு மேய்த்தவர்களை தாக்கிய 4 பேர் கைது கோபி,

மார்ச் 27– நம்பியூர் அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்களை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கரட்டுப்பாளையம் பகுதியில் செவ்வா யன்று, பத்துக்கும் மேற்பட்டோர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் அதிவேக மாக காரை சாலையில் ஓட்டி வந்தனர். இதனால், ஆடு,  மாடுகள் மிரண்டு ஓடியதால், அப்பகுதி மக்கள் கார்களை வழி மறித்து மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இத னால் ஆத்திரமடைந்த கார்களில் வந்தவர்கள் கால்நடை களை மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்து,  தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாக தாக்கிவிட்டு  தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த  அப்பகுதி மக்கள், நம்பியூர் - புளியம்பட்டி சாலையில் சாலை  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வரப்பாளையம்  காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் இரண்டு தனிப்படை கள் அமைத்து, தப்பிச் சென்றவர்களை திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேடி வந்தனர். அப்போது, திருப்பூரில் இருந்த மணிகண்டன், சுரேஷ்குமார், முகிலன், திவீஸ்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பசும்பொன் தேசிய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் என்றும், மணிகண்டனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்று விட்டு, மதுபோதையில் திரும்பும் போது, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, நான்கு பேரையும் வியாழனன்று நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வெள்ளி வாங்கி ஏமாற்றிய 2 பேர் கைது

சேலம், மார்ச் 27- சேலத்தில் வெள்ளியை வாங்கி ஏமாற்றிய 2 பேரை  காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாநகரம், கோட்டை, ஜலால்கான் தெருவை சேர்ந்தவர் சையத் இக்பால் (62). வெள்ளித்தொழில் செய்து  வருகிறார். தூய்மையான வெள்ளியை வாங்கி, கொலுசாக  மாற்றி விற்பனை செய்கிறார். இவருக்கு கோட்டை பகுதி யைச் சேர்ந்த முகமது வசிம் (26), செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த அவரது சித்தப்பா சிவா (40) ஆகியோர் அறிமுகமாகி யுள்ளனர். சையத் இக்பாலிடம், 50 கிலோ தூய்மையான வெள்ளியை வாங்கி, அதனை கொலுசாக மாற்றி விற்பனை செய்து தருவதாக கூறினர். ஆனால், அவர்கள் கூறியதுபோல வெள்ளியை விற்பனை செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி  வந்தனர். இதன்பின் 20 கிலோ கொலுசுகளை கொடுத்த நிலையில், 30 கிலோ வெள்ளியை கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் கொடுக்காத நிலையில் டவுன் குற்றப்பிரிவில் சையத் இக்பால் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது வசிம், சிவா ஆகியோரை கைது  செய்து, 16 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

சேலம், மார்ச் 27- மேட்டூர் அருகே கல்குவாரியின் இயந்திரத்தில் சிக்கி  தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள தின்னபெல் லூரை சேர்ந்தவர் சக்திவேல் (38). இவர் சேலம் மாவட்டம்,  மூலக்காட்டில் ஆறுமுகம் (50) என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், புதனன்று குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சக்திவேல் கீழே  விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக கொளத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

பருத்தி ஏலம்

நாமக்கல், மார்ச் 27- நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் புத னன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. நாமக்கல், சேந்த மங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், வளையப்பட்டி, மோகனூர், காட்டுப்புத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  விவசாயிகள் 3900 மூட்டை  பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில்  ஆர்சிஎச் ரகப்பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ.7991 வரை யும், சுரபி ரகம் ரூ.9200 வரை யும், மட்ட ரகம் ரூ.4989 வரை யும் ஏலம் போனது. மொத் தம் ரூ.92 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது.

உரிமமின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது

கோபி, மார்ச் 27– ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூரில் உரிமம் புதுப் பிக்காமல் பட்டாசு தயாரித்த தம்பதி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். எலத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி ருக்குமணி ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு செட்டியம்பதியில் கோவில் திருவிழாக்களுக்காக வான வேடிக்கை மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகள் தயாரிக்க உரி மம் பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டு உரிமம் முடிந்த நிலை யில் புதுப்பிக்காமல், விண்ணப்பித்துவிட்டு தொடர்ந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நம்பியூர் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில், பழனி சாமி மற்றும் ருக்குமணி ஆகியோர் ஐந்து பணியாளர்களை வைத்து உரிமம் புதுப்பிக்காமல் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து,  வெடிமருந்துப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

யானைகள் முகாம்

உதகை, மார்ச் 27- மேட்டுப்பாளையம் மற் றும் சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆண்டுதோறும் காட்டு யானைகள் நீலகிரி மாவட் டத்தை நோக்கி வருவது வழக்கம். இந்நிலையில், நீல கிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தில் நான்கு காட்டு யானைகள் முகாமிட் டிருந்தன. இதனையடுத்து புதனன்று காலை அப்பகு திக்கு வந்த குன்னூர் வனச்சர கர் ரவீந்திரநாத் தலைமை யில் வனத்துறையினர் யானைகளை விரட்டினர்.

டிராக்டர் மீது சரக்கு வேன் மோதியதில் 2 பேர் பலி

ஓமலூர் அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதியதில், 2 பேர் உயிரிந்த சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, துட் டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா, தெற்கத்தியூரைச் சேர்ந்த நரசிம்மன் (43),  ஆகிய இருவரும், டிராக்டரில் புதனன்று அதி காலை கோவை நோக்கி தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப் போது கலியனுர் பிரிவு என்ற இடத்தில் பின் னால் வந்த தர்பூசணி பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் மோதியது. இவ்விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ், நரசிம்மன் ஆகி யோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரக்கு வேன் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தீபக் (23) படுகாயங்களுடன் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார். அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்ப வம் குறித்து தகவலறிந்த சங்ககிரி போலீ சார் விரைந்து சென்று இறந்தவர்களின் சட லத்தை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவம னையில் பிரேத கிடங்கில் வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.