tamilnadu

பிரப் சாலைக்கு மீண்டும் பெயர் சூட்ட கோரிக்கை

பிரப் சாலைக்கு மீண்டும் பெயர் சூட்ட கோரிக்கை

ரோட்டில் பெயர் நீக்கம் செய் யப்பட்ட பிரப் சாலைக்கு மீண்டும் அந்தப் பெயரை சூட்ட வேண்டும்  என்று தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது. ஈரோட்டில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம், மாநில சிறு பான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச. தலைமையில் வியா ழனன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸா ரத்தலி, செயலாளர் ப.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அந்த மனுவில், “1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் நாடு சுதந் திரம் பெற்ற போது ஈரோட்டில் பிரப் ரோட்டைச் சுற்றியிருந்த பியூப் பிள்ஸ் பார்க், வ.உ.சி.பூங்கா, ராணி தெரு, ஆசாத் தெரு, மெக்ரிகர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பிரப் சாலையின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட வில்லை. கடந்த 2019 இல் அன் றைய முதலமைச்சர் ஈரோடு வருகை தந்த போது பிரப் பெயரை நீக்கி மறுபெயரை சூட்டினார். ஈரோட்டு மக்களுக்கு அந்தோனி வாட்சன் பிரப் ஆற்றியிருக்கும் பணிகளை நினைவில் கொண்டு, நன்றிக் கடன் என்ற அடிப்படையில் பிரப் பெயரை நீடிக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் பலனில்லை. எனவே, பொருத்தமான இடத்திற்கு பிரப் பெயரை சூட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அந்தியூரில் வசிக்கும் மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 57 இஸ்லாமிய பெண்க ளுக்கு சொந்த வீடோ, வீட்டும னையோ இல்லை. இதுகுறித்து கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சிய ரிடம் மனு கொடுத்தோம். ஓராண்டு  காலத்திற்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையத் தலைவர் இவர் களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டுமென மற் றொரு மனுவினையும் கொடுத்த னர். ஆணைய தலைவர் பேட்டி இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறுபான்மையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டுள்