tamilnadu

வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பாலப்பனஅள்ளி கிராமத்தில் சுமார் நூறு ஆண்டுகளாக புறம் போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா  வழங்கக் கோரி ஆட்சியர் ரெ.சதீஷிடம்  திங்களன்று மனு அளித்தனர்.  மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தை சேர்ந்த இந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக இங்கு வசித்து வரு கின்றனர். குடிசை மற்றும் ஓட்டு வீடுக ளில் வசிக்கும் இவர்களுக்கு, வீட்டு மனை பட்டா இல்லாததால் அரசு வழங் கும் பிற சலுகைகள் ஏதும் கிடைப்ப தில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிக ளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு, அவர்கள் குடியிருக்கும் பகு திக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர். நூறுநாள் வேலை கேட்டு மனு இதேபோன்று, பென்னாகரம் வட் டம், கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பட்டியலின பெண்கள் அளித்த மனுவில், நாங்கள் விவசாய  நிலம் இல்லாததால் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.  குறிப்பாக பெண்கள் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்நிலையில், நூறு நாள் வேலை அட்டைகள் இருந் தும், ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே  வேலை வழங்கப்படுகிறது. எனவே,  இந்திரா நகர் மக்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு, நூறு நாள்  வேலையை முழுமையாக வழங்க  வேண்டும் என அதில் தெரிவித்துள்ள னர்.