tamilnadu

img

காவிரி ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் சீரமைப்பு

காவிரி ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் சீரமைப்பு

தீக்கதிர் செய்தி எதிரொலி

நாமக்கல், ஏப்.25- தீக்கதிர் செய்தியின் எதிரொலியாக, பள்ளி பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் பழுத டைந்து காணப்பட்ட மின் விளக்குகள் சீரமைக்கப் பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியாக பள்ளிபாளையம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியாக கருங்கல்பாளையம் பகுதி உள் ளது. இந்த இரு மாவட்டங்களையும் இணைக் கும் வகையில், காவிரி ஆற்றின் மேல் 2 பாலங் கள் உள்ன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட ஆற்றுப்பாலம் ஒன்றும், கடந்த 10 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய ஆற்றுப்பாலம் என இரண்டு பாலங்கள் உள்ளன. பழைய பாலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மின்விளக்குகள் பழு தடைந்து வெளிச்சம் இல்லாத நிலையில், புதிய பாலத்தில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் இரண்டு பாலங்களிலும், வாகனப் போக்குவரத்து சீரான முறையில் இருந்து வந் தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இரண்டு ஆற்றுப்பாலத்திலும் உள்ள சுமார் 50க்கும்  மேற்பட்ட மின்விளக்குகளில் ஒன்று கூட எரியா மல், அப்பகுதி முழுவதும் இருட்டாக காணப்பட் டது. இதன் காரணமாக இரவு நேரத்தில் செல்லும்  வாகன ஓட்டிகள் அவ்வழியே அச்சத்துடனே சென்று வந்தனர். இதுகுறித்து கடந்த ஏப்.21 ஆம்  தேதியன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியா கியது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகம் மற் றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மின் விளக்குகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட னர். இதையடுத்து வியாழனன்று மாலை முதல் மின்விளக்குகள் எரிய துவங்கியதால், வாகன  ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். மேலும், முழுமையாக தொடர்ச்சியான பராமரிப்புகளை மேற்கொண்டு, வாகன ஓட்டிக ளுக்கு அச்சமில்லா சூழலை ஏற்படுத்தி தர வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.