tamilnadu

குன்னூரில் வாடகைப் பாக்கி கடைகளுக்கு இரவோடு இரவாக சீல்

குன்னூரில் வாடகைப் பாக்கி கடைகளுக்கு இரவோடு இரவாக சீல்

குன்னூர் நகராட்சிக்கு சொந்த மான கடைகளுக்கு வாடகையை  செலுத்தாத நிலையில், அதிகாரிகள்  கடைகளுக்கு சீல் வைக்கும்  நடவடிக்கையும் இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில், நக ராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கடை கள் உள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைவ தால், வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக் கையில் குன்னூர் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நி லையில், வாடகை பாக்கி வைத் துள்ள 41 கடைகளுக்கு எந்த முன்ன றிவிப்பும் இன்றி இரவு நேரத்தி லேயே சீல் வைக்கப்பட்டுள்ளது. இத னால், அதிகாலையில் கடைகளைத் திறக்க வந்த வியாபாரிகள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், “கடந்த 5 ஆண்டுகளாக கடையின் வாடகையை திடீரென உயர்த்தி, அதை வசூல் செய்யாமல் நிலுவையில் வைத்திருந்தனர். தற் போது, 5 ஆண்டுகளுக்கும் மேலான மொத்த நிலுவைத் தொகையை செலுத்தும்படி எங்களை வற்புறுத் துகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர், துணைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களி டம் முறையிட்டும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை”. எங்களுக்கு போதிய அவகாசம் அளிக்காமல், இர வோடு இரவாக கடைகளுக்கு சீல் வைத்தது நியாயமற்ற செயல். இத னால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர் வாகம் இந்த விவகாரத்தில் தலை யிட்டு, எங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும்” என்று கோரிக்கை விடுத் துள்ளனர். நகராட்சி நிர்வாகத்தின் விளக்கம் இதுகுறித்து குன்னூர் நகராட்சி ஆணையர் கூறுகையில், “வாடகைப் பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், வாடகையை செலுத்தவில்லை. எனவே, வேறு வழியின்றி கடைக ளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வியாபாரிக ளின் கோரிக்கையை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். குன்னூரில் வாடகைப் பாக்கி கடைகளுக்கு இர வோடு இரவாக சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுத்து, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண் டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.