tamilnadu

img

ரேசன் கடைகளுக்கு கூடுதல் பொருட்கள் தேவை

ரேசன் கடைகளுக்கு கூடுதல் பொருட்கள் தேவை

திருப்பூரில் வசிக்கும் வெளி மாவட் டத்தினருக்கு வழங்க ரேசன் கடைக ளுக்கு கூடுதல் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியா ளர் சங்க (சிஐடியு) நிர்வாகக்குழு கூட் டம், சனியன்று சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில், மாவட்டத் தலை வர் பி.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் கே.மகேந்தி ரன், பொருளாளர்  பி.சுரேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், திருப்பூரில் வசித்து வரும்  வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு  பெயர்வு விற்பனை மூலம் பொருட்கள் வழங்க 10 சதவிகிதம் கூடுதலாக ஒதுக் கீடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங் களில் பணியாற்றும் அனைத்து பணியா ளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையை மத்திய கூட்டுறவு வங்கி யில் செலுத்தாமல், வருங்கால வைப்பு  நிதி அலுவலகத்தில் செலுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந் துள்ள நியாய விலைக் கடைகளை சரி  செய்தும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர  வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்க ளுக்கு வழங்க வேண்டிய நிதிப்பயன் கள் மற்றும் கருணை ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க  பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு கூடு தல் ஒதுக்கீடு வழங்க பல முறை மாவட்ட  வழங்கல் அலுவலரிடம் கடிதம் அளித் தும் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே,  இதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.