tamilnadu

img

ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு! கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு! கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோயம்புத்தூர், நவ.25 -  தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் உத்வேகப் படுத்தவும், தொழில்துறையை மேம்ப டுத்தவும் கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த  மாநாட்டில், ரூ.43,844 கோடி மதிப் பிலான 158 புதிய தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல மைச்சர் முன்னிலையில் கையெழுத்தி டப்பட்டன. இதன் மூலம் 1,00,709 இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 தமிழ்நாடு மாநாட்டில் உரையாற்றிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மண் ணின் பெருமைகளையும், ஜி.டி. நாயுடு,  பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற திறமைசாலிகளை உருவாக்கிய வர லாற்றையும் நினைவு கூர்ந்தார். முத லீட்டாளர்களை வரவேற்ற அவர், அவர்கள் சாதாரண மாநிலத்திற்கு வர வில்லை என்றும், “கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான உழைப் பால், ஏராளமான முதலீட்டாளர்களின் தொழில் நம்பிக்கையைப் பெற்று,  இந்தியாவில் அதிகமான 11.9 விழுக் காடு பொருளாதார வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியிருக்கும் தமிழ கத்திற்கு வந்திருக்கின்றீர்கள்” என்றும்  பெருமிதத்துடன் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், தமிழ கம் அறிவுத் தரத்திலும், உழைப்பிலும் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம்  எனக் குறிப்பிட்டார். மற்ற மாநிலங் களை விட தமிழகம் முன்கூட்டி சிந்தித்துத் திட்டங்களைச் செயல்படுத் துவதாகவும், 1971-இல் சிப்காட் துவங்கியது, கம்ப்யூட்டர் கல்வியைத்  திட்டத்தில் சேர்த்தது, 1997-இல்  இந்தியாவில் முதல் மாநிலமாக ஐ.டி.  கொள்கை கொண்டு வந்தது, டைடல் பார்க் அமைத்தது போன்ற முற்போக்கான நடவடிக்கைகளால்தான் இன்று தமி ழகம் ‘நம்பர் ஒன்’ மாநிலமாகத் திகழ்கிறது என்றும் விளக்கினார். குவிந்துள்ள முதலீடுகளும் வெற்றிகரமான ஒப்பந்தங்களும் தமிழகம் முழுவதும் பரவலான, சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற  நோக்கில் செயல்படுவதாகத் தெரி வித்த முதலமைச்சர், வெளிநாடு களுக்கு நேரில் சென்றும் தொழில் நிறு வனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைச் சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததன் பல னாகவே இத்தகைய வளர்ச்சி சாத்திய மாகியுள்ளதாகக் கூறினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர் மாநாடு களின் விளைவாக, இதுவரை 1,016 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டி ருப்பதாகவும், இது கடந்த ஆட்சி காலத் தின் நான்காண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களைவிட இரண்டரை மடங்கு அதிகம் என்றும் அவர் புள்ளி விவரங்களுடன் விளக்கினார். இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11,40,731 கோடி முதலீடு பெறப்பட்டு, 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், எத்தனையோ மாநிலங் களில் ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை 80 சத வீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறு வனங்களாக மாறுகின்றன என்றும்,  1,016 ஒப்பந்தங்களில் 809 திட்டங்கள்  நிலம் வாங்குவது, கட்டுமானம் துவங்கு வது எனப் பல்வேறு நிலைகளில் செயல் பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஈர்ப்புக்குக் காரணம்: சரியான சூழலும், புள்ளிவிவரங்களும் இத்தனை நிறுவனங்கள் தமிழ கத்தை நோக்கி வருவதற்கு முக்கிய கார ணங்களை முதலமைச்சர் பட்டிய லிட்டார்: * வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் அரசு * திறன்மிக்க படித்த இளைஞர்கள் * தொழிலுக்கான சூழல் * சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பிடிக் காதவர்கள் அரசியல் காரணங்களுக் காகத் தவறான தகவல்களைப் பரப்புவ தாக அவர் குற்றம்சாட்டினார். தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த 6,24,130 நிறுவனங்கள், இப்போது 7,09,180 ஆக உயர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். மேலும், தி.மு.க.  ஆட்சிக்கு வந்த பிறகு 29 லட்சத்திற் கும் மேற்பட்டவர்கள் பி.எஃப். (PF) பெறு வதாக ஒன்றிய அரசு புள்ளிவிவ ரங்களை வெளியிட்டுள்ளதை எடுத்து ரைத்து, இதைவிடத் தமிழகம் தொழிலில்  வளர்ச்சி அடைந்திருப்பதற்கு வேறு புள்ளிவிவரங்கள் தேவையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசுகையில், முதலீட் டாளர்கள் கேட்கின்ற சலுகைகளை யும், அந்த முதலீட்டால் தமிழகத் திற்கு ஏற்படும் பலன்களையும் வைத்தே  திட்டங்கள் முடிவு செய்யப்படுவ தாகவும், வேலைவாய்ப்புக்கு உகந்த முத லீடுகளுக்கே முக்கியத்துவம் அளிப்ப தாகவும் தெரிவித்தார். கோவையின் உள்கட்டமைப்பு மேம் பாடுகள் குறித்துப் பேசிய அவர், பாறப்பட்டியில் பாதுகாப்பு தொழில் நிறு வனங்கள், சூலூரில் 200 ஏக்கரில் வான்வெளி தொழில் பூங்கா, சூலூர்  மற்றும் பல்லடத்தில் செமி கண்டெக் டர் பூங்கா அமைய உள்ளதைச் சுட்டிக் காட்டினார். “ஒரு டிரில்லியன் இலக்கை நோக்கி  இந்த ஆட்சி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது” என்று உறுதி யளித்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு எந்த வித தாமதமும், இடையூறும் இருக்காது  என்றும், முதலீட்டாளர்கள் தமிழகத் தில் முதலீடு செய்தால் தொழில் பல  மடங்கு வளரும் என்றும் தெரிவித்தார்.