tamilnadu

img

புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோவை குற்றாலம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோவை குற்றாலம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

புதுப்பொலிவுடன் கோவை குற்றா லம் திறக்கப்பட்ட நிலையில், அருவி யில் குளிப்பதற்காக ஞாயிறன்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்று லாப் பயணிகள் குவிந்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை யையொட்டி, சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலம் அருவி கடந்த  ஏப்.9 ஆம் தேதியிலிருந்து சாலை பராமரிப்பு பணிகளுக்காக சனியன்று வரை 4 நாட்களாக மூடப்பட்டது. இந் நிலையில், ஞாயிறன்று முதல் திறக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகளின் பயன் பாட்டிற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயி றன்று அதிகரித்து காணப்பட்டது. நீர்வீழ்ச்சியில் மிதமான அளவில் கொட் டும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். கோவை குற்றாலம் ஞாயி றன்று புதுப்பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட முதல்  நாளிலேயே சுமார் 4,500 பேர் நுழைவு கட் டணம் செலுத்தி அருவியில் குளித்து  மகிழ்ந்தனர். இது, கோவை குற்றாலத் தின் மீதான மக்களின் ஆர்வத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத் துக் காட்டுகிறது. கடந்த 4 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறக்கப் பட்டு இருப்பது உள்ளூர் மக்களுக்கும்,  வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீர மைப்புப் பணிகளின் மூலம் மேம்படுத் தப்பட்ட வசதிகள் மற்றும் அழகுபடுத் தப்பட்ட சூழல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்பதால், கோவை குற்றாலத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு டன் கோவை குற்றாலத்தை தூய்மை யாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

நீர்வரத்து இல்லை: கவியருவி மூடல்

கோவை மாவட்டம், வால்பாறை செல்லும் பிரதான சாலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள கவியருவிக்கு, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆழியார் பூங்கா மற்றும் கவியருவிக்கு வருகை புரிந்தனர். ஆனால், போதிய மழையில்லாததால் கவியருவிக்கு தண்ணீர் வராததால் அருவி மூடப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்காக ஆவலுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். ஆனால், ஆழியார் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.