தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள்
இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் 6 ஆவது தேசிய அள விலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் திங்களன்று கோவையில் நடைபெற்றது. கோவை மாவட்டம், வெள்ளகிணறு பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் 6 ஆவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, இந்திய சிலம்ப சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமை வகித்தார். இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர்ர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 4 வயது முதலான பள்ளி மாண வர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்ட இதில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டி தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்து கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டி களில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப் பாளர் தெரிவித்தார்.