tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மும்பை சைபர் கிரைம் போலீசார் எனக்கூறி மோசடி  குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவை, மார்ச் 17  - மும்பை சைபர் கிரைம் போலீசார் எனக் கூறி 11 பேரிடம்  ரூ.30 லட்சம் மோசடி செய்த குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ரித்திகா (25) தனி யார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு  செப்டம்பர் 20 ஆம் தேதி அவரது செல்போனுக்கு அடையா ளம் தெரியாத நபர் ஒருவர் அழைத்து, தாங்கள் “பெட் எக்ஸ்” கூரியர் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக கூறினார்.  ரித்திகாவின் அடையாள அட்டை ஆவணங்களை பயன் படுத்தி பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட் கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக வும் கூறினார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஸ்கைப் வீடியோ கால் மூலம் பேசிய நபர் கள், மும்பை போலீசார் எனக் கூறி ரித்திகாவின் வங்கி  கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என விவரங்களை  பெற்றனர். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து  ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரித்திகா, தேசிய சைபர் கிரைம் ஆன்லைன் போர்ட்ட லில் புகார் அளித்தார். கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரித்திகாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பிய நபரின் வங்கி  கணக்கை கண்டறிந்து முடக்கினர். தனிப்படை போலீசார் டெல்லியைச் சேர்ந்த கோபிகுமாரை (42) கைது செய்த னர். விசாரணையில், கோபிகுமார் போலியான இரண்டு நிறு வனங்களை தொடங்கி மோசடி பண பரிவர்த்தனை செய்து  வந்ததும், இதன் மூலம் இந்தியா முழுவதும் 11 பேரிடம் மோசடி செய்து பணம் பெற்றது தெரியவந்தது. அவரது அலுவலகம்  மற்றும் வீட்டில் இருந்து 6 செல்போன்கள், 2 டேப், 3 பட்டன்  செல்போன்கள், 7 ஏடிஎம் கார்டுகள், 3 காசோலை புத்தகம்,  4 ஹார்டு டிஸ்க், 10 சிம் கார்டுகள், போலி ரப்பர் ஸ்டாம்ப்,  லேப்டாப், பாஸ்போர்ட், பென் டிரைவ் ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோபிகுமார் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை 4  ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கோபிகுமார் குற்றவாளி என அறிவித்து, அவ ருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1.50 லட்சம்  அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கோபி குமார் கைது செய்யப்பட்ட 20 நாட்களில் இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 55 நாட்களில் வழக்கு விசா ரணை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

காலிப்பணியிடங்களை நிரப்பிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலி யுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில்  தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் போராட்ட ஆயத்தக் கூட்டம்  திங்களன்று நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.விஜியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், மாநில துணைத்தலைவர் பி. ஜீவா, மாவட்டச் செயலா ளர் தீ. லெனின் மகேந்திரன், பாலக்கோடு கோட்டத் தலை வர் ஏ.கோவிந்தன், தருமபுரி கோட்டச் செயலாளர் எம். ஆறுமுகம், அரூர் கோட்ட நிர்வாகி டி.மகாத்மா ஆகி யோர் பங்கேற்று பேசினர். இதில், திமுக தேர்தல் வாக்குறுதி 153-ன்படி, மின்சார வாரி யத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலா ளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண் டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வாரியமே நேரடியாக  தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொதுத்துறையான மின்துறையை தனி யார் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.  மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச்  25 ஆம் தேதியன்று திருவண்ணாமலை தலைமைப் பொறியா ளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டத்திற்கு பெருமளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலவச வீட்டுமனை கேட்டு குவிந்த மனுக்கள்

ஈரோடு, மார்ச் 17- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச  வீட்டுமனை கேட்டு ஏராளமான மனுக்கள் குவிந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்  தொகை, கல்வி கடன், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா  மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், புதிய குடும்ப அட்டை,  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள்  மற்றும் உதவித்தொகை, சாலை வசதி, பேருந்து வசதி  மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் குறித்து மொத்தம் 480 மனுக்கள் வரப்பெற்றன. இதில், கணிசமான மனுக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வந்தன. பொதுமக்கள் அளித்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்று, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி,  அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.