tamilnadu

img

மேதின கொடியேற்று விழா 


கோவை , மே 1-
உழைப்பவர் உரிமை தினமான மேதினத்தை நினைவு கூறும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற மேதின நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன் தலைமை தாங்கினார்.    மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மேதின செங்கொடியை ஏற்றி உரையாற்றினார். இவ்விழாவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன் உள்ளிட்ட திரளானோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.
இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் சிபிஎம்,  சிஐடியு - ஊழியர்கள் அவரவர் வீடுகளில் செங்கோடியேற்றி மேதின சூளுரைத்தனர்.

கோவை தீக்கதிர் பதிப்பு
 தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மே தின செங்கொடியை மூத்த தோழர் ஜெயா ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் பொறுப்பாசிரியர்கள் எம் .கண்ணன் , ஏ.ஆர்.ராஜா , விளம்பர மேலாளர் கே.அழகப்பன் , விநியோக மேலாளர் ஏ.நெல்சன் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே , கோவை ராமநாதபுரம் திருவள்ளூவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கம்யூனிச இயக்க அனுதாபியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு காலமானார். முன்னதாக ,  தனது இறப்பிற்கு முன்னர் இவர் எழுதிய உயிலில் ஓவ்வொரு ஆண்டும் மே தினத்தன்று தீக்கதிர் நாளிதழுக்கு ரூ.ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தன்று அவரின் குடும்பத்தார் தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பு அவலகத்திற்கு நேரில் வந்து நன்கொடை அளித்து செல்வது வழக்கம். அதே போல் , இவ்வாண்டு கொரோனா அச்சத்தில் நகரமே முடங்கிபோயியுள்ள  நிலையிலும், வெள்ளியன்று காலை தீக்கதிர் அலுவலகத்தில் கொடியேற்றும் முன்னரே அவரின் குடும்பத்தார் நேரில் வந்து நன்கொடை அளித்து சென்றது அவரையும் பெரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

சேலம்
 சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகமான சேலம் சிறைதியாகிகள் நினைவகத்தில் நடைபெற்ற விழாவில் செங்கொடியை மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி ஏற்றி வைத்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குணசேகரன், வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

 இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, நங்கவள்ளி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தாலுகா, ஓமலூர், கல்வராயன் மலை, வாழப்பாடி, சங்ககிரி, மேச்சேரி, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் சிபிஎம் இடை கமிட்டிகள் சார்பில் மே தின விழா கொடியேற்றம் நடைபெற்றது. 

 மேலும் , சேலம் உருக்காலை, மேட்டூர்கெம்பிளாஸ்ட், சேலம் செவ்வாய்பேட்டை, ரயில்வே கூட்செட், ஏபிடி அலுவலகம், போக்குவரத்து பணிமனைகள் உள்ளிட்டு பல இடங்களில் சிஐடியு சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.