மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாஜக ஆளும் மகாராஷ்டிராவில், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்தியை கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் 2025-26 கல்வியாண்டு முதல் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.