tamilnadu

img

இந்தி மொழி மட்டுமே தேசிய மொழியா?

அமித்ஷா  கருத்தால்  நாடு பிளவுபடும்

தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை,செப். 14- இந்தி மொழி மட்டுமே தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்றும் அனைத்து மாநிலத்தவர்களும் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக தலைவரும்  மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கருத்துக்கு திமுக தலை வர் மு.க.ஸ்டாலின்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலை வர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். சென்னை அண்ணா அறிவால யத்தில் சனிக்கிழமை செய்தியாளர்க ளிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில். தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்  பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு,  2ஆவது முறையாகத் தொடர்ந்து தமிழ்  மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் மத்திய அமைச்சர் பேசி யிருக்கிறார். அமித்ஷா கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சி யளிக்கிறது. இந்தியாவின் ஒரு மைப்பாட்டிற்குக் குந்தகம் விளை விக்கும் வகையில் அவரது பேச்சு  அமைந்துள்ளது. எனவே, அக்க ருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.   ஞாயிறன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள், கழக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடை பெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படிச் சந்திப்பது? எப்படி நம்மு டைய எதிர்ப்புக் குரலைக் கொடுப்பது?  என்பது பற்றிக் கலந்து பேசி முடி வெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம் என்றார்.

கி.வீரமணி 

‘இந்தியா ஒரே நாடு - எனவே இந்திதான் ஒரே ஆட்சி மொழி’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது நாட்டைப் பிளவுபடுத்தும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்  வேற்றுமையில்  ஒற்றுமை என்ப தால் இந்திய நாடு ஒரு கூட்டமைப்பு - பல மாநிலங்களைக் கொண்ட கூட்ட மைப்பு  ஆகும். பல மாநிலங்களில் பல  மொழிகள் - இந்தியை விட மூத்த தும், இலக்கண - இலக்கியச் செறிவும்  கொண்ட பல மொழிகள், பண்பாடு களை உள்ளடக்கியது! பல நாடுகளிலும் பல மொழிகள்  ஆட்சி மொழிகளே. இதில் ஒரே மொழி  என்று கூறுவது மக்களாட்சி தத்து வத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத் திற்கும், அவர்கள் பதவியேற்குமுன்  இந்திய அரசமைப்புச் சட்டத்தினை பாதுகாப்போம் என்று கூறிய உறுதி மொழிக்கும் முற்றிலும் எதிரானது. அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணைக்குள் இந்தி போன்ற மற்ற  21 மொழிகளையும் அங்கீக ரிக்கப்பட்டதற்கு இது விரோதமாகும். மக்களின் மொழி உணர்வு என்ற  நெருப்போடு விளையாடுவது புத்தி சாலித்தனமல்ல. பொருளாதார பின்ன டைவை திசை திருப்பவே இப்படி கருத்துக்களை மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கிறார்களோ என்று வீரமணி அதில் கூறியுள்ளார்.

வைகோ கண்டனம் 

இந்தி மொழி மட்டும் என்றால் தமி ழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது என மதிமுக பொதுச்செய லாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசுகை யில், இது எப்படி நடைமுறைப் படுத்தப்படும் எனும் கேள்வி எழுந்து  வருகிறது. இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநி லங்கள் இருக்காது. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியை எதிர்க்கின்றன. வடகிழக்கு மாநி லங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழி ஆகும். அரிச்சுவடிகூட அறியாத ஒரு வர் தமிழ்நாட்டின் முதல்வராக உள்ளார் என்றார். 

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறு கையில், சங்பரிவார் அமைப்பின் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு தான் பாஜக என்று குற்றம் சாட்டி யுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா இந்தி தினத்தையொட்டி, தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடி யாது என்றார். கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியின்  போது பாஜக அரசு, ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் தீவி ரம் காட்டியது. இது இந்திய ஜன நாயகத்தை அழிக்கின்ற முயற்சி என  நாங்கள் அன்றே கூறினோம். மீண்டும்  அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்பு, தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அரசு  எடுத்திருக்கும் முடிவு இதற்கு உதாரணமாகும். தற்போது வெளிப் படையாகவே உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே தேசம் ஒரே மொழி என்ற கொள்கை இருந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக இருக்க முடியும் எனக் கூறியிருக்கிறார். இதுதான் அவர்களின் நீண்ட கால  கனவுத் திட்டம். ஆர்.எஸ்.எஸ் சங்பரி வார் அமைப்புகளின் செயல் திட்டங்  களைச் செயல்படுத்துகின்ற அர சாகத்தான் பாஜக இருக்கிறது. ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்றால் ஒரே  தேசம்; ஒரே மதம், ஒரே தேசம்; ஒரே மொழி என்று பொருள். இந்தி மொழியைத் தவிர வேறு  மொழி எதுவும் இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் இலக்கு.  அதற்கேற்ப கல்விக்கொள்கையை யும் அவர்கள் மாற்றி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.