திருச்சிராப்பள்ளி, ஆக. 4 - திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் ஒன்றி யம் பச்சைமலையில் உள்ள 5 கிராமங் களில் மலைவாழ் மக்கள் நலச்சங்க கொடி யேற்று விழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு கோம்பை பகுதியில் உள்ள மருதை கிராமத் தில் நடைபெற்றது. சங்க கொடியை கிராம தலைவர் ஏற்றி னார். சிபிஎம் துறையூர் ஒன்றியச் செயலா ளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மலை வாழ் மக்கள் நலச் சங்க மாநில பொருளாளர் பொன்னுசாமி சிறப்புரையாற்றினார். கோம்பை ஊராட்சியில், தாலூர் செல்வ ராணி, மருதை செல்வகணபதி, செம்புளிச்சான் பட்டி ஜெயந்தி, போந்தை பரமசிவம், மேலூர் சந்தியா ஆகியோர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கிலிதுரை, ரவி உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.