சேலம், ஏப்.6-சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு மாநகரகுழு சார்பில் ஏழு மையங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம்நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாநகர் வடக்கு கமிட்டிசார்பில் ரெட்டியூர் பகுதியில் கட்சியின் மூத்த தோழர் டி.சேஷகிரி தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி துவக்கி வைத்தார். இப்பிரச்சாரத்தில் தற்போதைய பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலைஉயர்வு, விலைவாசி உயர்வும், வேலையின்மையும், ஆலைமூடல், வேலை இழப்புகளும் அனைத்துப் பகுதி மக்களையும் எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாகி யுள்ளனர்.குறிப்பாக பணமதிப்பு நீக்கம் அப்பாவி பொதுமக்களையும் சிறு, குறு நடுத்தரதொழில் உரிமையாளர்களையும் புரட்டிப்போட்டுவிட்டது.மேலும், நீட் தேர்வின் மூலம் தமிழகமாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துள்ளனர். குடிசைத் தொழில்கள் சிறு,குறு நடுத்தர தொழில்கள் சீரழிக்கப்பட்டுகோடிக்கணக்கான தொழிலாளிகளின் வேலை பறி போயுள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலையை உருவாக்கும் என்று கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி கூறினார். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று நாடு முழுவதும் 1.1 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். மேலும்,இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள்,அறிஞர்கள், துணைவேந்தர்கள் என அனைவரும் மோடியின் பாசிச ஆட்சியைஎதிர்த்துள்ளனர். ஆகவே, நாடாளுமன்றத்தேர்தலில் திமுக தலைமையில் அமைந்தமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிவேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்குவாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இப்பிரச்சாரம் ரெட்டியூர் பகுதியில் துவங்கிய ஸ்வர்ண புரி, பெரிய புதூர், கோர்ட்ரோடு, மணக்காடு, சின்னதிருப்பதி, கோரிமேடு உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம்நடைபெற்றது.இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், மாநகர செயலாளர் எம்.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், சேலம் வடக்கு மாநகரகுழு உறுப்பினர்கள் வி.வெங்கடேஷ், பி.ராஜேஷ்குமார், வி. முருகானந்தம், ஆர்.வி.கதிர்வேல், பி.செந்தில்குமார், பி.தமிழ்ச்செல்வன், ஜி.ஸ்ரீதேவி, எஸ்.காவிரி, ஆர்.கே.சங்கர், ஏ.பி.கோவிந்தன், த.மணிமுடி, எம்.பரமசிவம், எம்.நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.