கோவை மதுக்கரை பகுதியில் பெய்த கனமழையால் கடந்த 2020ம் ஆண்டு ₹50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது.
கோவையில் மதுக்கரை பகுதியில் பெய்த கனமழையால், மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ₹50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிகை வைத்துள்ளனர்.