குல்தீப் செங்காருக்கு ஜாமீன் மறுப்பு
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி (சம்பவம் நடந்த போது) வேலை தேடிச் சென்றபோது அப்போ தைய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் அவரை பாலியல் வன்கொ டுமை செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக 2018இல் உ.பி., முதலமைச்சர் ஆதித்யநாத்தின் வீட்டின் முன்பு சிறுமி தீக்குளிக்க முயன்ற பின்னரே வழக்குப் பதிவு செய்யப் பட்டது. ஆனால் வழக்கை வாபஸ் பெறக் கோரி சிறுமியின் தந்தை மீது பொய் வழக்கு சுமத்தப்பட்டு குல்தீப் செங்கா ரின் ஆட்கள் மற்றும் காவல்துறையால் தாக்கப்பட்டதில், 2018 ஏப்ரல் மாதம் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 2019இல் தில்லி நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் சிறுமியின் தந்தை காவலில் உயிரிழந்த வழக்கில், செங்காருக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் ஆயுள் தண்டனையை தில்லி உயர்நீதி மன்றம் நிறுத்தி வைத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ணின் தந்தை காவலில் உயிரிழந்த வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி குல்தீப் செங்கார் தொடுத்த மேல்முறையீடு வழக்கு தில்லி உயர்நீதி மன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் துடேஜா, “இந்த வழக்கில் நிவார ணம் வழங்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. செங்கார் நீண்ட காலம் சிறையில் இருந்தபோதிலும், காலதாமதத்தைக் காரணம்காட்டி அவருக்கு நிவாரணம் வழங்க முடியாது என ஜாமீன் மறுத்து உத்தரவிட்டார்.
