குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்..
கோவை மாநகரில் அமைந்துள்ள பள்ளி பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வின் போது, பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்களில் சுமார் 60% பெற்றோர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிந்து வருவது தெரிய வந்துள்ளது. எனவே, குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர் தலைக்கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம் என கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இனி வரும் நாட்களில் அனைத்து பள்ளிகளின் அருகிலும் வாகன தணிக்கை மேற்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.