மயானத்தை மீட்டுத்தர வலியுறுத்தல்
ஈரோடு, டிச. 29- குறிச்சி கிராமத்தில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டி லிருந்த மயானத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். பவானி வட்டம், குறிச்சி கிராமத்திற்குட்பட்டது செல்லிக்க வுண்டனூர் காலனி. இங்கு வசிக்கும் மக்கள் பல தலைமுறை களாக அப்பகுதியில் இருக்கும் இடத்தை மயானமாகப் பயன் படுத்தி வந்தனர். இதன் அருகில் உள்ள பட்டாதாரர் திடீர் என மயானத்தை தனது பட்டா நிலம் என ஆக்கிரமித்துள் ளார். தலைமுறைதலைமுறையாய் பயன்படுத்தி வந்த மயா னத்தை மீட்டு சுற்றுச்சுவர் எழுப்பி, சாலை மற்றும் மின் விளக்கு வசதி செய்து கொடுக்குமாறு அம்மனுவில் தெரிவித்துள் ளனர்.
