இறந்தவரை டோலி கட்டி தூக்கிச் சென்ற சம்பவம் சாலை வசதி செய்திட ஆட்சியர் அறிவிப்பு
மேட்டுப்பாளையம் கடம்பன் கோம்பை மலை கிராமத்தில் இறந்தவரை டோலி கட்டி தூக்கிச் சென்ற விடியோ வைரலான நிலை யில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகள் மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்த காரமடை நெல் லித்துறை ஊராட்சியில், கடம்பன் கோம்பை மலைகிராமம் உள் ளது. இந்த மலைகிராமத்தை சேர்ந்த மணி என்ற தொழிலாளி கடந்த பிப்.20 ஆம் தேதியன்று பொருட்கள் வாங்க காரமடை சென் றார். அப்போது திடிரென மார டைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந் தார். இதையடுத்து அவரை மேட் டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை யளித்து வந்த நிலையில், 21 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உடல்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடல் ஆம்புலென்ஸ் மூலம் கடம்பன்கோம்பை கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மலைகிராமத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத தால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலை விற்கு டோலி கட்டி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அழைத் துச் சென்றனர். இது குறித்த செய்தி நமது தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதனை யடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தர ஆட்சியர் உத்தரவிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் திங்களன்று செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது காரமடை மலைகிராமத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் டோலி கட்டி தூக்கிச் சென்ற செய்தி மற்றும் விடியோ வைரலானது. இது குறித்து கடம்பன்கோம்பை கிரா மத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் ஒரு குழு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.2.5 மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசி டம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதே போல குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. வனத்துறை தடை யில்லா சான்றிதழ் வாங்கப்பட்டுள் ளது. தனியார் ஏஜென்ஸி மூலம் செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் துவங்கி நிறைவடையும், இதே போல கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது, என்றார்.