tamilnadu

img

130 ச.கி. மீட்டர் வனத்தை அழித்து, பழங்குடியினரை வெளியேற்றத் திட்டம் மோடி அரசால் பேரழிவு அபாயத்தில் கிரேட் நிக்கோபார் தீவு!

130 ச.கி. மீட்டர் வனத்தை அழித்து, பழங்குடியினரை வெளியேற்றத் திட்டம் மோடி அரசால் பேரழிவு அபாயத்தில் கிரேட் நிக்கோபார் தீவு!

ஸ்ரீ விஜயபுரம் (போர்ட் பிளேர்), மார்ச் 20- அந்தமான் நிக்கோபார் தீவு களின் தென் கோடியில் அமைந் துள்ள கிரேட் நிக் கோபார்  தீவில் ஒன்றிய மோடி  அரசு செயல்படுத்தத் துடிக்கும் சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா உள்கட்டமை ப்புத் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்தத் திட்டம் தீவின் அபூர்வ மான சூழலியல் மண்டலத்தை அழிப்ப தோடு, அங்குள்ள பூர்வகுடி பழங்குடி யினரைத் தங்களின் வாழ்விடத்தி லிருந்து நிரந்தரமாக அப்புறப் படுத்தும் அபாயம் உள்ளதாகக் கூறி இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடு மாறு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சூழலியல் சமநிலைக்கும் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல் கிரேட் நிக்கோபார் தீவில் சர்வ தேசக் கொள்கலன் முனையத் துறை முகம், விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஒரு புதிய நகரியத்தை உருவாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்ப ளவுள்ள கன்னி வளக் காடுகள் அழிக்கப்படவுள்ளன. இதில் சுமார் 10 லட்சம் மரங்களை வெட்ட வேண்டி யிருக்கும் என்பது சூழலியல் ஆர்வலர் களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் நிக்கோபார் மாநிலச் செயலாளர் டி. அய்யப்பன் மற்றும் டாக்டர் கௌரங்கா மாஜி உள்ளிட்ட தலைவர்கள் மிகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மை யில் அந்தமான் துணைநிலை ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்களின் கருத்துக்களைக் கேட்கா மல் தன்னிச்சையாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர். “இந்தத் தீவு ஒரு பல்லுயிர் பெருக்க மண்டலம். இங்குள்ள காடுகளையும், பவளப் பாறைகளையும் அழிப்பது மீள முடி யாத இயற்கைச் சீரழிவிற்கு வழி வகுக்கும்” என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பழங்குடியினரின் நில உரிமையும் சட்ட மீறல்களும் இத்திட்டத்திற்காக சுமார் 84 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பழங்குடி யினரின் பாதுகாக்கப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 2004 சுனாமிக்குப் பிறகு தற்காலிக மாக இடம்பெயர்ந்த நிக்கோபாரிஸ் பழங்குடியினர், தங்களின் பூர்வீக  நிலங்களுக்குத் திரும்பக் காத்திருக் கும் வேளையில், அந்த நிலங்களை அரசு வலுக்கட்டாயமாகப் பறிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வன உரிமைச் சட்டத்தின்படி, பழங் குடியினரின் முறையான ஒப்புதல் இன்றி நிலங்களை மாற்ற முடியாது.  ஆனால், பழங்குடியினக் குழுக்களின் தலைவர்களை நில ஒப்படைப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் அழுத்தம் கொடுப்ப தாகப் புகார்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள், இது பழங்குடி யினரின் கலாச்சார அடையாளத் தையே அழிக்கும் முயற்சி என்று எச்சரித்துள்ளனர். சாஸ்திரி நகர் மற்றும் காந்தி நகர் மக்களின் போராட்டம் கிரேட் நிக்கோபார் தீவின் சாஸ்திரி நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதி ராக அந்தப் பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு இத்திட்டத்தை “தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது” என்று  தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இருப்பினும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகத் தீவின் இயற்கை வளங்களையும், எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பலியிடக் கூடாது என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் தலையிட மறுத்திருந்தாலும், முறையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. லெப்ட் வியூஸ்