கோவையில் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தங்கவேலு(66) அவரது மகன் நந்தகுமார்(34) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நார்த்தங்காடு தங்கவேலு. இவர் இன்று காலை தனது மகன் நந்தகுமாரை கொடுமுடிக்கு அனுப்புவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கிட்டாம்பாளையம் நால் ரோடு அருகே வந்தபோது பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து தங்கவேல் மற்றும் நந்தகுமார் மீது அதிவேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் இருவரும் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் விபத்து தொடர்பான பதை பதைக்கும் சிசிடிவி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதிவேகமாக காலையில் பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.