ஒரே நாளில் 2 முறை அசாமில் மீண்டும் நிலநடுக்கம்
அசாமின் நல்பாரி பகுதியில் சனி யன்று காலை மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில்,”காலை 6.06 மணி யளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகி உள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் 26.30 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.30 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்டுள் ளது. லக்கிம்பூர் பகுதியில் மதியம் 1.30 மணியளவில் ரிக்டரில் 3.5 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது” என அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக் கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளி யாகவில்லை. கடந்த வாரம் அசாமில் 5 ரிக்டர் அளவிற்கும் மேலாக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
