தில்லியில் “அறிவின் அழிவு” கருத்தரங்கம்
தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் “அறிவின் அழிவு (வரலாறு மற்றும் அறிவியலைத் திரித்தல்) குறித்த அகில இந்திய கருத்தரங்கம் தில்லியில் உள்ள ஹெச்.கே.எஸ். சுர்ஜித் பவனில் ஜன., 17 அன்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் ஐஐடி மும்பையின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ராம் புனியானி, சிஎஸ்ஐஆர்- என்ஐஎஸ்சிஏஐஆர் முன்னாள் தலைமை விஞ்ஞானி கவுஹர் ரசா, வரலாற்றாசிரியரும், டிஜிட்டல் கிரியேட்டருமான ருச்சிகா சர்மா, ஐசிஎச்ஆர்-இன் முன்னாள் உறுப்பினரும், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் ஆர். கோபிநாத் ஆகியோர் உரையாற்றினர். மேலும் மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, தலைவர் ஆதர்ஷ் எம்.சஜி, துணைத் தலைவர்கள் சுபாஷ் ஜாகர், எஸ்.ஷில்பா, இணைச் செயலாளர்கள் ஆய்ஷே கோஷ், அனில் தாக்கூர் ஆகியோரும் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
