இ-பாஸ் முறையை ரத்து செய்ய வியாபாரிகளின்
முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஏப்.2 ஆம் தேதியன்று வியாபாரி கள் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்டச்செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக் கையில், “நீலகிரி மாவட்டம் தென் னிந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் எல்லைப் பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள சுற்றுலாத் தலங்களை நம்பி ஆயி ரக்கணக்கான வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் தொழி லாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்திய இ-பாஸ் முறையால், வார நாட்க ளில் 6000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்க ளும் மட்டுமே அனுமதிக்கப்படு கின்றன. இதனால் சுற்றுலாப் பய ணிகளை நம்பியுள்ள வியாபாரி கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஏற்க னவே இருந்த HPF, SBT போன்ற நிறு வனங்கள் மூடப்பட்ட நிலையில், தேயிலை மற்றும் மலை காய்கறி களை பயிரிடும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில் இ-பாஸ் முறை மேலும் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அனைத்து சுற் றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங் கங்கள் இணைந்து நடத்திய ஆலோ சனைக் கூட்டத்தில், “ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் இ-பாஸ் முறை யால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இதனால் தங் கும் விடுதிகள், உணவகங்கள் மற் றும் சிறு குறு வணிகர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 2 அன்று முழு கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள் ளோம்,” என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த முழு அடைப்பு போராட் டத்திற்கு, அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமை யாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், நீலகிரி மாவட் டத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகியுள்ளனர். எனவே, இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.