tamilnadu

img

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி சர்வதேச விமான நிலையத்திற்குப் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் (30), காளீஸ்வரன் (28) மற்றும் உறவினர் குணா (25) ஆகிய 3 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். 3 பேரையும் போக்சோ, வன்கொடுமை சட்டம் உள்ளிட்டவற்றில் கைது செய்தனர். இந்த வழக்கு பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உட்பட மொத்தம் 113 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஒரே மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 4 மாதங்களாக இவ்வழக்கு விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன், குணா தவசி ஆகியோர் குற்றவாளிகள் என்றும், இவர்கள் மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.