articles

அவள் - தமயந்தி அங்கமுத்து, வழக்கறிஞர், திருப்பூர்

அவள் 

அவள் பிறப்போ புதிய உலகின் முதல் மூச்சு  அவள் மௌனமோ அடக்குமுறையை அளக்கும் புயலின் முன்னுரை  அவள் குரலோ சமூகத்தின் மையத்தில் ஒலிக்கும் சட்டம்  அவள் கண்ணீரோ அநீதியின் முகத்தில் விழும் அக்னித் துளி  அவள் கல்வியோ சமூக புரட்சியின் பட்டய ஆயுதம்  அவள் சிரிப்போ மூடிய சாளரங்களைத் திறக்கும் விடியற் கதிர்  அவள் நடையோ பழைய விதியை கடந்து செல்லும் புதிய வரலாறு  அவள் கேள்வியோ உலகத்தைப் பிளக்கும் சத்தமில்லாத புரட்சி  அவள் சிந்தனையோ சட்டமாகும் முன் பிறக்கும் நீதி  அவள் வாழ்வோ அடிமை ஒப்பந்தமல்ல சமத்துவத்தின் உடன்படிக்கை  அவள் ஆற்றலோ சமையலறை புகையில் சுருங்கிய கனவுகளை மீட்டெடுத்த வேர்ச்சக்தி  அவள் - வேர்பிடித்த மின்னல் அவள் - சுயமரியாதையின் சத்தியம் அவள் - சமத்துவத்தின் உயிர்த்தெழுச்சி  ஆம் செயலால் காட்டிய அளவிட முடியாத அண்டம் அவள்......