பைக் ரேஸில் சங்கமித்த ஜோடி
திருப்பூரைச் சேர்ந்த பைக் ரேஸ ரும், அஸ்ஸாமைச் சேர்ந்த பெண் பைக் ரேஸரும் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். திருப்பூர் கொங்கணகிரி பகுதி யைச் சேர்ந்தவர் சக்திவேல். ஆன் லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகி றார். இவர் பைக் ரேஸில் ஆர்வம் கொண்டவர். பல ஊர்களில் நடைபெ றும் பைக் ரேஸில் பங்கேற்று வந்தி ருக்கிறார். அப்போது அஸ்ஸாமைச் சேர்ந்த பெண் பைக் ரேஸர் ஒருவரும் பல போட்டிகளில் பங்கேற்று வந்தி ருக்கிறார். கௌஹாத்தி அருகில் உள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்த அவர் பெயர் ஊர்மிளா. நட்பு தொடரவே, இருவரும் இணைந்து பல்வேறு மாநி லங்களில் பைக் ரேஸ்களில் பங்கேற்றி ருக்கின்றனர். மூன்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்த பயணத்தில் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து வாழ லாம் என்று முடிவு செய்திருக்கின்ற னர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஊர்மிளா திருப்பூரில் வந்து பனியன் கம்பெனியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். சக்திவேல் தனது விருப்பத்தை குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே அவர் களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பெண் வீட்டார் திருமணத்திற்கு வரா விட்டாலும் திருமணம் செய்து கொள்ள எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. இதையடுத்து ஊர்மிளாவுக் கும், சக்திவேலுக்கும் திருப்பூரில் எளிய முறையில் திருமணம் முடித்து, திங்களன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி வைத்திருக்கின்றனர். சாதி கடந்து, இனம் கடந்து இந்தியாவின் இரு வேறு திசைகளில் இருக்கும் தொலை தூர மாநிலங்களைச் சேர்ந்த இருவர் திருமணத்தை உறவினர்கள் வாழ்த்தியுள்ளனர். பைக் ரேஸில் இணைந்து பயணித்தவர்கள், தற் போது இல்லற வாழ்க்கையில் இணைந்து பயணம் மேற்கொள்வ தற்கு பலர் வாழ்த்துத் தெரிவித்துள் ளனர்.