வெயிலுக்கு இதம்! சேலத்தில் ‘இயற்கை ஏசி’ ஆட்டோ
சேலம் மாவட்டத்தில் கோடை வெயி லின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்ற னர். குறிப்பாக, ஆட்டோ மற்றும் இரு சக் கர வாகனங்களில் பயணிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பெரிதும் சிர மப்படுகின்றனர். இந்த நிலையில், சேலம் குரங்கு சாவடி பகுதியைச் சேர்ந்த 75 வயது ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி, தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தனது ஆட்டோவை ‘இயற்கை ஏசி’ ஆட்டோவாக மாற்றியுள்ளார். ஆட்டோ வின் மேல் பகுதியில் சோளத் தட்டு களை பரப்பி, அதன் மீது தண்ணீர் சொட்டு சொட்டாக ஊற்றும் வகையில் மின்மோட்டாரை அமைத்துள்ளார். இதன் மூலம், ஆட்டோவின் உட்புறம் குளிர்ந்த காற்று வீசுகிறது. மேலும், சுப்ரமணி தனது ஆட்டோ வில் பயணிகளின் தாகம் தணிக்க குடி நீர், சிறிய அளவிலான பேட்டரி மின் விசிறி, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி போன்ற கூடுதல் வசதிகளையும் செய் துள்ளார். “ஏழை, எளிய நடுத்தர மக்கள்தான் ஆட்டோக்களில் அதிகம் பயணிக்கின்ற னர். அவர்களை வெயிலின் தாக்கத் தில் இருந்து பாதுகாக்கவே இந்த வசதிகளை செய்துள்ளேன். இதற்காக நான் கூடுதல் கட்டணம் வசூலிப்ப தில்லை,” என்று சுப்ரமணி கூறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வரும் சுப்ரமணி, தனக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை பொதுமக்களுக்கு பயன்த ரும் வகையில் செலவிடுவதாக தெரி விக்கிறார். மேலும், தமிழக அரசு தனக்கு சிறப்பு நிதி வழங்கினால், அந்த தொகையையும் ஆட்டோவை மேம் படுத்த பயன்படுத்துவேன் என்றார். சுப் ரமணியின் இந்த செயல், பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுப்ரமணி, ஆட்டோ ஓட்டுவதற்கு முன்பு 40 ஆண்டுகள் டெய்லராக பணி யாற்றி வந்த நிலையில், ரெடிமேடு கடைகள் அதிகம் வரத்தொடங்கியதால் தையல் தொழில் பாதித்தது. கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டு நராக இருந்து வருகிறார். இவர், ஆட்டோவில் ஏறும் முதியவர்களுக்கு 50% சலுகை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. - எ