கோவை, ஏப்.2- கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஹோட்டல், மெஸ்,பேக்கரி உரிமையாளர் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கோவையில் அமைதி நிலவினால்தான் வியாபாரம், வர்த்தகம் செழிக்கும். அந்த வகையில் அமைதிக்கான வேட்பாளரான மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு, எங்களது சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடியவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜனுக்குஎங்களது வாக்குகளை அளிப்பது என ஏகமனதாக எங்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.