சேலம், ஜன.6 - ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலா ளர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப் பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப் பலன்களை உடனடியாக வழங் கிட வேண்டும். விருப்ப ஓய்வுபெற்ற தொழி லாளர்களுக்கு ஓய்வுக்கான பணப்பலனை உடனடியாக வழங்கிட வேண்டும். பணிக் காலத்தில் இறந்த போக்குவரத்துத் தொழி லாளர் குடும்பங்களுக்கு, இதுவரை வழங் காமல் உள்ள குடும்ப உதவி தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை தலைமை அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சங்கத்தின் மாநில இணைப் பொதுச்செயலாளர் பி.செல்வராஜன், பொதுச்செயலாளர் எஸ்.அன்பழகன், மாவட்ட தலைவர் பழனிவேல் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.