tamilnadu

img

நூற்றாண்டு கால வாழ்வுரிமைப் போராட்டம்: இன்று சிபிஎம் மக்கள் கோரிக்கை மாநாடு

நூற்றாண்டு கால வாழ்வுரிமைப் போராட்டம்: இன்று சிபிஎம் மக்கள் கோரிக்கை மாநாடு

அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தருமபுரி மாவட்டம், வேலைக்காக இடம்பெயரும் மக்கள், வற்றாத ஒகேனக்கல் ஆறு இருந்தும் வறட்சியின் பிடியில் தவிப்பது, வனத்துறையினரின் அடாவடி, வளர்ச்சிக்கு நிலம் கொடுத்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றதது என கோரிக்கைகள் ஏராளம். இன்னமும் பின்தங்கிய மாவட்டமாக தருமபுரி இருப்பது பேரவலம். நூற்றாண்டு கால வாழ்வுரிமை போராட்டத்தை சந்தித்து வரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செங்கொடி இயக்கம் மக்கள் கோரிக்கை மாநாடு இன்று நடத்துகிறது.

மேட்டூர் அணைக்காக தங் கள் நிலங்களைத் தியாகம் செய்த தருமபுரி மாவட்டம், ஏம னூர் மற்றும் ஏர்ரப்பட்டி கிராம மக்கள், இன்று ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்த மண்ணிலேயே அகதிக ளாக மாற்றப்படும் அவலநிலை ஏற் பட்டுள்ளது. பென்னாகரம் வட்டம், ஏமனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆங்கிலேயர் காலம் முதல் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு 1996-ல் 314 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டதுடன், பள்ளி, சுகாதார நிலையம் போன்ற அரசு கட்டமைப்புகளும் உள்ளன. இருப்பினும், அங்குள்ள பழங்குடி மக்களுக்கு இதுவரை பட்டா வழங் கப்படவில்லை. இந்நிலையில், அரசு அறிவித்த 66 தொகுப்பு வீடுகளுக் கான பணி ஆணையை வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதுடன், விவசா யிகள் காலம் காலமாக சாகுபடி செய்து வரும் நிலத்தில் வனத்துறை யினர் முள்செடி நட்டு ஆக்கிர மிக்க முயல்வது மக்களின் வாழ்வா தாரத்தைக் கேள்விக்குறியாக்கி யுள்ளது. இதேபோல, ஏர்ரப்பட்டி கிராமத் தில் 1937 முதல் வசித்து வரும் 72 விவ சாய குடும்பங்களை, 1882-ஆம் ஆண்டு வனச்சட்டத்தைக் காட்டி வெளியேற்ற வனத்துறை முயல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம், குடிநீர், சாலை வசதி என அனைத்தும் உள்ள நிலையில், தற்போது இதனை ஆக்கிரமிப்பு எனக் கூறுவது நியாயமற்றது என  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின் றனர். இடிந்து விழும் வீடுகள்; எட்டாக்கனியாகும் மயானப் பாதை: கலப்பம்பாடி ஊராட்சி, தளி ஹள்ளி போன்ற பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலங் களில் உயிருக்கு அஞ்சியபடி வாழும் இப்பகுதி மக்கள், போதிய இடவசதி யின்றி ஒரே வீட்டிற்குள் மூன்று குடும்பங்களாக நெருக்கடியில் சிக்கி யுள்ளனர். மேலும், மயானத்திற்குச் செல்ல முறையான பாதையின்றி, ஒரு  கிலோமீட்டர் தூரம் சடலங்களைக் கைகளால் சுமந்து செல்லும் அவ லம் இன்றும் தொடர்கிறது. வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும், அனைவருக்கும் முறையான பட்டா வழங்க வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொது மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எளிய  மக்களின் தியாகத்தையும், அவர்க ளின் அடிப்படைத் தேவைகளையும் உணர்ந்து தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது. இன்று சிபிஎம் மாநாடு இந்நிலையில், மேற்கண்ட மக் கள் கோரிக்கைகள் மற்றும் காவிரி உபரிநீர் திட்டம், தொழிற்பேட்டை, மனைப்பட்டா, நிலப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிச.19 ஆம் தேதியன்று (இன்று) மக்கள் கோரிக்கை மாநாடு பென்னாகரத்தில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாடு குறித்து தெரிவிக்கும் வகையில், மக் கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்று வந்தது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், வே. விஸ்வநாதன், ஜி.சக்திவேல், இடைக் கமிட்டி செயலாளர்கள் ஆ.ஜீவானந் தம், பி.ஆர்.செல்வம், ஆர்.சக்தி வேல், எம்.தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ரவி, ஆர்.சின்ன சாமி, எம்.குமார், கே.அன்பு, சி.ராஜி, என்.பி.முருகன், பி.சக்கரைவேல், எம்.வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்டது பிக்கிலி ஊராட்சி. இங்கு மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. பிக்கிலிமலை ஊராட்சி கடல் மட் டத்திலிருந்து 900 மீட்டர் (3000 அடி)  உயரத்தில் அமைந்துள்ளது. மலைப் பாதைகள் வழியே சென்றுதான், கிரா மங்களை அடைய முடியும். பிக்கிலி ஊராட்சிக்கு பாப்பாரப்பட்டியில் இருந்து திருமல்வாடி வழியாக பெரி யூர் வரை சுமார் 17 கிலோ மீட்டர்  தொலைவாகும். பிக்கிலி ஊராட்சி யில் கரிபள்ளம், தண்டுகாரண அள்ளி, புதுகரம்பு, குறவன்தின்னை,  பானாகட்டு, அம்மன் நகர், மத்தாள பள்ளம், பிக்கிலி, பூதிநத்தம், பெரியூர், கொல்லப்பட்டி, சக்கலிநத்தம், மேட் டுக்கொட்டாய் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு மிகவும் பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் என மொத்தம் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இங்குள்ள மக்கள் விவசாயிக ளாகவும், விவசாயக் கூலிகளாக வும் உள்ளனர். பிக்கிலி மலை கிராமங்களில்  இருந்து கொடி வழியாக (ஒத்தையடிப் பாதை) பாப்பாரப்பட்டிக்கு நடந்து சென்று வந்தனர். பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதிருந்த ஊராட்சி நிர் வாகம் மண் சாலை அமைக்க முயற்சி செய்து சாலைப்பணிகள் முழுமைய டையவில்லை. பின்னர் 1981 ஆம்  ஆண்டு முதல் 1982 ம் ஆண்டில் திரு மல்வாடி கிராமத்தில் இருந்து பிக்கிலி பெரியூர் வரை மண் சாலை அமைக் கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் கிராம மக்கள் இணைந்து நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பாப் பாரப்பட்டிக்கு நடந்தே சென்று வந்த மக்கள், காசு கொடுத்து லாரியில் பயனம் செய்தனர். மக்களின் போராட்டத்தால் 1989 ஆம் ஆண்டு ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டது. தற்போது தருமபுரி மற்றும் பென் னாகரத்தில் இருந்து 6 அரசு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலை அமைக்கப்படும் போது, குதிரைகட்டு கணவாய் என்னும் இடத்தில் மலையின் உச்சியை சரித்து அதன் நடுவே சாலை அமைக்கப்பட் டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்  அமைக்கப்பட்ட சாலை ஒரு வழிச் சாலையாக உள்ளது. இந்த 50 ஆண்டு காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கேற்ப வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. மலையின் ஓரம்  செல்லும் இந்த சாலையானது மிக வும் குறுகலான சாலை, லாரி அல் லது நான்கு சக்கர வாகனங்கள் வரும் போது எதிரில் இருசக்கர வாகனத் தில் வருவோர் ஒதுங்கி செல்வதே பல இடங்களில் சிரமமாக உள்ளது. சில  நேரங்களில் பேருந்துகள் மலைப்பா தையை கடக்க முடியாமல் திணறு கின்றன. மேலும், மலை கிராமங்க ளில் விளைவிக்கும் பொருட்களை சந் தைப்படுத்த லாரி மூலம் கொண்டு செல்லும் போது மலைப்பாதையில் செங்கூத்தான சாலையால் வாகனங் கள் ஏற முடியாமல் திணறி லாரி கவி ழும் நிலை ஏற்படுகிறது. இந்த குறுக லான சாலையில் சிறு விபத்து முதல் பெரிய விபத்து வரை நடந்துள்ளது. குறிப்பாக அரசு பேருந்து பலமுறை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த மலைப்பாதையில் மட்டும் நூற்றுக் கும் மேற்பட்ட மனித உயிர்கள் பறி போய் உள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பி னர் சி.சண்முகம் கூறுகையில், திரு மல்வாடி கிராமத்திலிருந்து பிக்கிலி ஊராட்சி பெரியூர் வரை சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குறுகிய சாலையா கவே உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் வாகன பெருக்கம் ஏற் பட்டுள்ளது. குறிப்பாக குதிரைகட்டு கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பல உயிர்கள் பறிபோய் உள்ளன. விவசாயப் பொருட்களை லாரியில் ஏற்றிச்செல்லும் போது, கண வாய் பகுதியில் லாரியின் முன்பகுதி யில் டிராக்டர் இழுத்து செல்லும் நிலை  பல ஆண்டு காலமாக தொடர்கிறது. மலை ஏறும்போது குறுகிய சாலை யாக உள்ளது. எனவே, பிக்கிலி பெரி யூர் வரை இருவழிச்சாலையாக விரிவு படுத்த வேண்டும். சாலையை விரிவுப டுத்த பல்வேறு அதிகாரிகளை சந் தித்து மனு கொடுத்துள்ளோம்; போராட்டம் நடத்தியுள்ளோம்; நடவ டிக்கை இல்லை. எனவே, பிக்கிலி ஊராட்சி மக்களின் நலன் கருதி தமிழ் நாடு அரசு நடவடிக்கை வேண்டும், என்றார். -ஜி.லெனின்