கோவை:
கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “கொரோனா தொற்றால் தமிழக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சிறு, குறு தொழில் துறையினர் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அவர் களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைக்கவில்லை” என்றார்.6 மாத காலத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கை. அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். 6 மாத காலத்திற்கான வட்டியை நீக்கம் செய்ய வேண்டும். இது பற்றி மாநில அரசு, பிரதமரிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்து விட்டன. அரசு விழா என்பது மக்கள் பங்கெடுக்கும் விழா. இதில் அனைவருக்கும் மருத்துவ சோதனை செய்ய அனுமதிக்கப்படுகிறதா?. தவறை மூடி மறைப்பதற்காக, மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாதவர்கள் அரசு விழாவில் அனுமதிக்கப் படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆயூஷ் அமைச்சக கூட்டத்தில் இந்தி மொழி தெரிந்தவர்களை அனுமதிப்பது என்ற அதிகாரியின் நடவடிக்கை தவறானது என்றும் அழகிரி தெரிவித்தார்.