tamilnadu

img

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

கோவை, மார்ச் 23- எழுத்தாளர் இராமதாசு எழுதிய ‘பால்குளமும் பூவரச  மரமும்’ நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற் றது. கோவை அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் எழுத்தாளர் இராமதாசு எழுதிய ‘பால்குளமும் பூவ ரச மரமும்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு க.அறிவன் தலைமை வகித்தார். இரா. சதீஷ் குமார் வரவேற்றார். விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் நூல்  வெளியிட கோவை வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள்  பேராசிரியர் முனைவர் கோ. விஜயராகவன் பெற்று கொண் டார். கவிஞர் மீ. உமா மகேஸ்வரி, எழுத்தாளர் அரங்க இல. வள்ளியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்புரையாற்றினார். நிறைவாக நூல் ஆசி ரியர் இராமதாசு ஏற்புரையாட்டினார். நிகழ்வில் எழுத்தா ளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.