tamilnadu

தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு

தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு

கோவை, மே 1- தமிழகத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வணிகர்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவ தாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.  கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் திறந்து வைத்து, பார்வை யிட்டார். இந்த கண்காட்சியில் 31 அரசு துறைகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளில் செய்துள்ள சாதனைகள் விளக்கப்பட் டுள்ளது. இந்த கண்காட்சியானது வியா ழனன்று துவங்கி வரும் ஜூன் 14 ஆம் தேதியன்று வரை நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா.கிரியப்பனவர், காவல் ஆணையர் சரவணசுந்தர், மாவட்ட வருவாய் அலு வலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) சங்கித் பல்வந்த் வாகே, கோவை நாடாளுமன்ற உறுப் பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இதனைத்தொடர்ந்து, செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனை கள், செயல்பாடுகளை, அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மூலம் அரசுப் பொருட்காட்சி கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது வரை கோவையில் 37 பொருட்காட்சி கள் நடைபெற்றுள்ளது. தற்போது நடை பெறவிருப்பது 38 ஆவது பொருட்காட்சி யாகும். செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை என மொத்தம் 26 அரசுத் துறை களும், கோவை மாநகராட்சி என மொத் தம் 7 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 துறைகளில் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்காட்சி இன்றிலிருந்து தொடங்கி 45 நாட்கள் நடைபெற வுள்ளது. பொதுமக்கள் கடந்தாண்டை போல இந்த ஆண்டும் நல்ல வரவேற் பினை அளிக்கவேண்டும். தமிழ் பெயர் பலகை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்த பெயர் பலகைகளை எடுத்து விட்டு முறையாக தமிழில், அரசு  வழிகாட்டுதல் படி பெயர் பலகையை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது.  அதே போல, தற்போது ரூ 2  ஆயிரம் வரை அபராத கட்டணம் விதிக் கப்பட்டிருகிறது. இதை தமிழ் வளர்ச்சித் துறை கண்காணித்து சுட்டிக்காட்டு கிறது, என்றார்.