கவுன்சிலராக மாற்றுத்திறனாளி நியமனம்
கோவை, நவ.26- மேட்டுப்பாளையம் நகராட்சியில், மாவட்ட நியம னக்குழு தேர்வு செய்த மாற்றுத்திறனாளி உறுப்பினர் பதவி யேற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசு அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் நியமன உறுப்பினர் களை நியமிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து ஒவ் வொரு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தேர்வுக்குழு உருவாக்கப் பட்டு, அதில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யபட்டனர். இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மாவட்ட நியமன உறுப்பினர் பதவிக்கு 9 பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் ஷேக் பரித்துல்லா (42) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நியமன உறுப்பினருக்கு புதனன்று பதவியேற்பு நிகழ்ச்சி மேட்டுப் பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நியமன உறுப்பினர் ஷேக் பரித்துல்லாவுக்கு, நகராட்சி ஆணையர் அமுதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு நக ராட்சி தலைவர் மெஹரீபர்வின், துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதன் பின் இந்திய அரசிலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள் ளப்பட்டது.
