அங்கன்வாடி ஊழியர் சங்க மாநாடு
பொங்கலூரில் அங்கன்வாடி ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றிய மூன்றாவது மாநாடு சனி யன்று நடைபெற்றது. பொங்கலூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் ராமாத் தாள் தலைமை ஏற்றார். வேணி வரவேற்றார். சிஐடியு திருப் பூர் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். செயலாளர் ஆ.சுமதி, பொருளாளர் நா. தேன்மொழி ஆகியோர் அறிக்கைகயை முன்வைத்தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.அனிதா, மாவட்டத் தலைவர் த.சித்ரா, பொருளாளர் கே.பேபி, ஓய்வுபெற்ற அங் கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி எம்.பாக்கியம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஞாயிறு விடுமுறை, பணி வரன்முறை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் கே.சித்ரா நிறைவுரையாற்றினார். முடி வில், செல்வி நன்றி கூறினார்.
கோவை சிறையில் கைதி உயிரிழப்பு
கோவை, மார்ச் 9- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மத்திய சிறைச் சாலையில் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை ரத்தினபுரியை சேர்ந்த செந்தில் (38) என்பவர் போக்கோ வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளியன்று அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிறைச்சாலையில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சிறை காவலர்கள் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சிறை அதிகாரி லதா பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, பல சர்ச்சைகளில் சிக்கி வரும் கோவை மத்திய சிறையில், அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.