அபாயகரமான நிலையில் அங்கன்வாடி மையங்கள்
திருப்பூர், மே 6- தென்னம்பாளையம் பகுதியில் சுவர் மற்றும் மேற்கூரைகள் சிதலம டைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயகரமான நிலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரு கிறது. இதை உடனடியாக ஆய்வு செய்து புனரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ள னர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 51 மற்றும் 52 ஆவது வார்டுக்கு உட்பட்ட காட்டுவளவு மற்றும் பூம்புகார் நகர் பகுதிகளுக்கான 2 அங்கன்வாடி மையங்கள் திருப்பூர் தென்னம்பாளை யம் அரசு பள்ளிக்கு பின்புறம் செயல் பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்குள் சுவர் மற்றும் மேற்கூ ரைகள் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இங்கு வரும் குழந் தைகளை கவனித்துக் கொள்ள 2 மையங்களுக்கும் 3 ஆசிரியர்கள், 2 உத வியாளர்கள் பணி புரிந்து வருகின்ற னர். மேலும், இங்கு புதன்கிழமை களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் சத்து மாவு பெறுவதற் காகவும், கைக்குழந்தைகளுக்கு தடுப் பூசி, சொட்டு மருந்து போடவும் வருவது வழக்கம். இந்த அங்கன்வாடி மையத் தின் சுவர் மற்றும் மேற்கூரைகள் சிதலம டைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயகரமான நிலையில் உள் ளன. இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், சுவர் மற்றும் மேற்கூரை கள் சேதமடைந்துள்ள இந்த அங்கன் வாடி மையத்தில் குழந்தைகளை விட அச்சமாக உள்ளது. விழும் நிலையில் உள்ள கூலிங் சீட்டை அகற்றிவிட்டு புதிதாக மாற்ற வேண்டும். மேலும், வெயில் காலங்களில் சிமெண்ட் சீட் கூரைகளின் கீழ் குழந்தைகள் அமர முடி யாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும், பின்புறம் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, எலி உள்ளிட்ட விஷ ஜந்துகள் வந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளை பிளே ஸ்கூல்களில் சேர்ந்த்தால் ஆயிரக்க ணக்கில் பணம் கட்ட வேண்டும். பனி யன் கம்பெனிகள், கடைகளில் பணிபு ரியும் ஏழை எளிய மக்கள் ஆயிரக்க ணக்கில் பணம் கட்டி தங்கள் பிள்ளை களை பிளே ஸ்கூலில் சேர்க்க முடியாது. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதற்கு இதுபோன்ற அங்கன் வாடி மையங்களை நம்பித்தான் உள்ள னர். எனவே ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் அங்கன்வாடி மையங் களை ஆய்வு செய்து அடிப்படை வசதி கள் செய்துதர வேண்டும். மேலும், புதுப் பிக்க வேண்டிய அங்கன்வாடி மையங் களை கோடை விடுமுறை முடிவதற்குள் புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி னர்.