சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் (56) மாரடைப்பால் காலமானார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு தற்காலிக நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத், கடந்த 2023ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார்.