பிஎப் அலுவலகத்தில் கண்ணியமான நடத்தையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை
கோவை, ஏப்.25– பிஎப் அலுவலகத்திற்கு வரு பவர்களை அலைகழிக்கும் போக்கை கைவிட்டு, கண்ணிய மான முறையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளியன்று அனைத்து தொழிற்சங்கத்தினர், கோவை பிஎப் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. வருங்கால வைப்பு நிதி அலு வலகத்திற்கு வரும் தொழிலாளர் களை, உரிய முறையில் நடத்த வேண்டும். நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான கோரிக் கைகளுக்கு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வெள்ளியன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில், சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, தொமுச துரை, ஏஐடியுசி கவுன்சில் செயலாளர் சி.தங்கவேலு, ஏஐசிசிடியு பாலசுப் பிரமணி, எச்எம்எஸ் மாநிலச் செய லாளர் டி.எஸ்.ராஜாமணி, ஐஎன்டி யுசி சண்முகம், எம்எல்எப் தலைவர் ஷாஜகான், ஓய்வுபெற்றோர் அமைப் பின் குமாசாமி, எல்டியுசி ஜெயபிர காஷ் ஆகியோர் உரையாற்றினர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி நிறுவன அலு வலகத்திற்கு அன்றாடம் தொழி லாளர்கள் வருகின்றனர். இப்படி வருபவர்களை இங்குள்ள அதிகாரி கள் கண்ணியமாக நடத்துவ தில்லை. வயது முதிர்ந்த நிலையில் வருபவர்களைக்கூட வாயிலில் நீண்ட நேரம் நிற்க வைப்பது தொடர் கிறது. அவர்களுக்கு முறையாக வழிகாட்டுவதும் இல்லை. சிறிய தவறுகள் இருந்தாலும் கூட அவர் களை திருப்பி அனுப்பி விடுகின்ற னர். பி.எப் நிர்வாகத்தின் இந்த மோசமான போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த முன்னேற் றமும் இல்லாத நிலையில், அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க வேண் டியதாகி உள்ளது. இந்த போக்கை உடனடியாக கைவிட வேண்டும். தொழிலாளர்களின் பிரச்சனைக ளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று ஆணையரை வலியுறுத்துகி றோம். மேலும் குறைந்தபட்ச ஓய்வூ தியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண் டும் என்று ஏற்கனவே கமிஷன் பரிந் துரை செய்துள்ளது. ஆனால், ஒன் றிய மோடி அரசு இதுவரை அதனை நடைமுறைப்படுத்தாமல் அமைதி யாக உள்ளது. தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து 8.33% பிடித் தம் செய்யப்படும் நிலையில், அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூ தியம் கூட வழங்கப்படுவதில்லை. தற்போது ஆயிரம், 900 ரூபாய் என மிகக் குறைந்த தொகையே ஓய்வூ தியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மருந்து மாத்திரை வாங்கு வதற்குக் கூட போதுமானதாக இல்லை. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கோரிக்கை மனுவை பி.எப் அதிகா ரிகளிடம் தொழிற்சங்கத்தினர் வழங்கினர்.