தோழர் நல்லகண்ணு மறைவிற்கு செம்மார்ந்த அஞ்சலி!
கோவை, பிப்.26- சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் நல்லகண்ணு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தி வருகின்ற னர். அதன்ஒருபகுதியாக சென்னை பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. தெய்வேந்திரன், கே.எஸ்.கனகராஜ், சிங்கை நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் சார்பில் வியாழ னன்று தோழர் நல்லகண்ணு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர். அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக் குழு அலுவலகத் தில் புதனன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, எம்.அசோகன் ந.வேலுசாமி கே.தங்கமணி சு.சுரேஷ். எம்.கணேஷ பாண்டியன், எம்.ஆர்.முருகேசன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. அலுவ லக செயலாளர் பி. சந்திரன் தலைமை யில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எ.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.கனகராஜ், என்.பிரவீன் குமார் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். தருமபுரி தோழர் ஆர்.நல்லக்கண்ணு மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, சோ.அருச்சுனன், ஆர்.மல்லிகா, ஜி.சக்திவேல், விஸ்வநாதன், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். ஈரோடு ஈரோடு மாவட்டம், அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தோழர் நல்லகண்ணு-வுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டி ருந்த அவரது உருவப்படத்திற்கு, அந்தி யூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்க டாசலம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி மற்றும் தாலுகா செயலாளர்கள் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.
