tamilnadu

img

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திங்க ளன்று துவங்கியது.  தமிழக பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு திங்களன்று துவங்கி வரும் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில், இந்த தேர்வை 37, 938 மாணவ, மாணவிகள் எழுது கின்றனர். தேர்வுகளை பார்வையிட  சேலம் கோட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சி யர் பிருந்தாதேவி ஆய்வு மேற் கொண்டார். சேலம் மாவட்டத்தில் 12-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வை 20,206  மாணவர்களும், 17,722 மாணவிக ளும் எழுதுகின்றனர். மொத்தம் 37,938 மாணவ, மாணவிகள் 151 தேர்வு மையங்களில் தேர்வு எழுது கின்றனர். இந்த தேர்வுகளை கண் காணிக்க 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும், தேர்வு மையங்களில் முறையான அடிப் படை வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மாணவர்கள் மன தைரியத் துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அறிவு ரை வழங்கினார். பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பொதுத் தேர்வு  நேரத்தில் மாணவர்களை சிரமப் படுத்தும் விதமாக பேசவோ, நடந்து  கொள்ளவோ கூடாது என்றும் ஆட்சியர் அறிவுரை வழங்கினார். தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசி எடுத்து வர தடை  விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணி யில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர் வறையில் அலைபேசி வைத் திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களுக்கும் புகார்களுக்கும் தொடர்பு கொள்ள  உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள் ளது. கோவை கோவை மாவட்டத்தில் 128 மையங்களில், 363 பள்ளிகளை சேர்ந்த 16,353 மாணவர்கள், 18,941  மாணவிகள் என மொத்தம் 35,294 பேர் தேர்வு எழுதுகின்றனர்.  மேலும் 649 தனித்தேர்வர் களும் தேர்வு எழுதுகின்றனர். அதே  போல 290 பறக்கும் படை, நிலை யான படை அலுவலர்கள் மற்றும்  2150 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையங் களிலும் மின்விசிறி, தண்ணீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய் யப்பட்டுள்ளது. அதே போல மாற் றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு  எழுதவர தேவையான சக்கர  நாற்காலிகள் மற்றும் மாணவர் கள் தாமதமின்றி தேர்வு மையங்க ளுக்குச் செல்ல ஏதுவாக தடை யின்றி பேருந்து வசதிகளும் மேம் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட் டம், சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி  தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய அவர், முதல் நாளான திங்களன்று 35,294 மாணவர்கள் தேர்வு எழுதுக்கின்றனர். 128 மையங்களில் தேர்விற்கான ஏற் பாடுகள் அனைத்தும் செய்யப்பட் டுள்ளது. மாற்று திறனாளிகளிக் கான தேர்வு எழுதுவதற்கான ஏற் பாடுகள் அனைத்தும் செய்யப் பட்டுள்ளது. தேர்வு எழுதும் அனைத்து மாணவர்கள் வாழ்த்துக் கள் என தெரிவித்தார். உதகை நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர்  கல்வி மாவட்டங்களில் உள்ள 41 மையங்களில் 2925 மாணவர்கள் மற்றும் 3395 மாணவிகள் என  மொத்தம் 6320 பேர் எழுதியுள்ள னர். ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆயிரத்து 540 மாணவ, மாணவியர்களும், தனித்தேர்வர்கள் 234 மாணவ,  மாணவியர்களும் எழுதுகின்றனர்.  25ஆம் தேதி வரை நடைபெறும்  இத்தேர்வில் திங்களன்று 22ஆயி ரத்து 287 மாணவ, மாணவியர்க ளும், 5 தமிழ் பாட விலக்கு (தமிழ் மொழி அல்லாத பாடப்பிரிவு) மாணவ, மாணவியர்களும், 164 தனித்தேர்வர்களும் எழுதினர். இதில் சலுகைகள் பெற்று தேர்வு  எழுதும் 437 மாணவ, மாணவியர் களும் தேர்வு எழுதியுள்ளனர். இத் தேர்விற்கு 108 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.